Friday, December 8, 2006

முகவுரை

பெரியார் நாத்திகம், பிராமண எதிர்ப்பு தவிர வேறு எதுவும் பெரிதாக செய்யவில்லை என்ற தவறான கருத்து, அவரை பற்றி தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத, அவரை வெறுக்கும் சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. நான் அறிந்த பெரியார் பற்றியும் அவர் ஆற்றிய முக்கிய சொற்பொலிவுகளையும், ஆவர் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பெருந்தொண்டு பற்றியும் இந்த பதிவில் பதிக்கவுள்ளேன். அவர் குறித்த வாசகர் சந்தேகங்களுக்கு விடையளிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்.
பெரியாரை போற்ற நான் நாத்திகனாக மாற வேண்டியதில்லை என்பது என் கருத்து

5 comments:

Anonymous said...

வாருங்கள்...தொடரட்டும் உங்கள் பணி. என் போன்ற இளைய சமுதாயம் பெரியாரை இன்னும் நேசிக்க உங்கள் பதிவுகள் உதவும்

குஹப்ரியன் said...

வருகைக்கு நன்றி தரண். பெரியாரின் பேச்சுகள் மட்டும் அல்லாது, பலர் தவறாகக்குறை கூறும் அவரின் சில செயல்களின் பின்னனி/பொருள் ஆகியவற்றையும் விளக்க உள்ளோம். தொடர்ந்து கவனியுங்கள்.

மாசிலா said...

நல்ல முயற்சி.
இந்து மதம என்ற பெயரில் ஒரு நூதன, அராஜக, அதிரடி, சர்வாதிகார சமுதாய அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பூர்வீக மக்களை சுரண்டியும், ஒதுக்கியும், சுதந்திரம் பறிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு வாழ்க்கையின் சக்கரத்தின் விளிம்பில் தள்ளப்பட்டு
காலம் முழுதும் வேதனைகளை அனுபவித்து வந்தவர்களுக்கு குறள் கொடுத்த அந்த பெரியவரின் பெருமையை சரிபட அறியப்படுத்துவீர் என நம்பி வாழ்த்துகிறேன்.
நன்றி. வணக்கம்.
அன்புடன் மாசிலா.

குஹப்ரியன் said...

@மாசிலா,
வருகைக்கும் தருகைக்கும் நன்றி. பெரியாரின் புத்தகங்களை சேகரிக்கத்தொடங்கி இருக்கிறேன். விரைவில் பல பதிப்புகளை பதிக்க இருக்கிறோம். தொடர்ந்து கவனியுங்கள்.

yasir said...

பயனுள்ள நல்ல பதிவிற்கு வாழ்த்துக்கள். பெரியாரைப்பற்றிய கருத்துக்கள் நிறைய அரிய வேண்டியிருக்கிறது எதிர்பார்க்கிறேன்.